Search
Tuesday, 27 July 2010
7 Tips for Stress Relief at Work
1. Live one day at a time. Do one task after another instead of taking off with all of them at a time. Taking on too much often does more harm than good. Finishing one task at a time is more manageable and will also motivate you to keep working.
2. Be grateful and thankful for small blessings. How many people in this world are given the responsibilities like yours? You don’t have to face war, famine, hunger, illness, bad economy and unemployment, unlike 250 million people on Earth. Therefore, smile and face the challenges ahead.
3. Take slow, deep breath at beginning of each day. Repeat this several times. Think about the goal that you want to achieve for the day. Are you up to the challenge? Believe in yourself! The most important key for stress relief is your inner strength, physically and mentally.
4. Sit down for your meal and focus on it. Chew it well. Chew longer if you’re having steak. Stress relief happens as you focus on your meal and relax. Rushing during eating can make you choke or feel ill. Enjoy your meal. Be human.
5. Forgive those who sins against you. Learn to let go. Bury the hatchet. Life is too short to bear grudges. It takes 44 muscles in your face to frown, but it only takes 4 to smile. So lift an arm and pat the back of somebody to settle old scores and shrug it off.
6. Enjoy your journey to work. Drive there early to avoid rush hour traffic, turn on the music, and sing out loud. Whatever your method, it should be something that will lift up your spirits.
7. Enjoy your journey home. If you’re stuck in traffic, don’t sulk. Smile to the drivers next to you – it might make them (and you) feel better. You might even think of what you’d like to have for dinner. Chew on chewing gum. Listen to music. Ensure your safety by avoiding calls on the hand phone during driving. After all, arriving home safe can be a relief too.
To stop stress & end anxiety, you can download the 15 hours interview’s contents with 14 world greatest industry experts, which compiled & offered by Dave McDonough for free. You can check it out at www.stress-relief-secrets-revealed.info
Monday, 26 July 2010
பட்டதாரிகளிடம் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்னென்ன ?
முக்கிய ஐந்து அம்சங்களை இங்கே பார்க்கலாம் :
1. தகவல் பரிமாற்றத் திறன் : தகவல் பரிமாற்றம் என்றாலே நன்றாகப் பேசுவது மட்டும்தான் என்ற தவறான கருத்து நம்மிடையே உள்ளது. ஆனால் நல்ல தகவல் பரிமாற்றம் என்பதில் நாம் நினைப்பதைப் பேசுவதோடு, நம் எதிரில் இருப்பவர் சொல்வது மற்றும் எதிர் பார்ப்புக்கேற்ப பேசுவதும் அடங்கும். இதனால்தான் மிகச் சிறந்த சில பேச்சாளர்கள் கூட, அரங்கிலிருப்பவரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் தகவல் பரிமாற்றத் திறன் குறைந்தவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். எனவே பேசுவது, கவனித்து அதன் பின் அதற்கேற்ப பேசுவது என்ற இரு அம்சங்களும் தேவைப்படுகிறது.
2. ஈடுபாடு : ஒரு நிறுவனத்தில் பணி புரியும் இளம்தலைமுறையினர் அந்த நிறுவனத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு பணிபுரியும் போது அவர்களை அறியாமலேயேஅவர்கள் நண்பர்களிடமும், மற்றவர்களிடமும் நிறுவனத்தைப் பற்றிய நல்ல தகவல்களை வெளியிடுகிறார்கள். இது நிறுவனத்திற்குப் பெரிதும் உதவிகரமாக உள்ளதாக நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பணியில் சேர்பவரின் தனி நபர் ஈடுபாடு அவரின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் முக்கிய கருவியாகவும் உள்ளது. எனவேதான் தற்போதைய நிறுவனங்கள் இந்த அம்சத்தில் கவனம் செலுத்துகின்றன.
3. தர்க்கரீதியான சிந்தனை : இன்றைய பாடப் பகுதிகள் ஓரளவுக்கு இந்தத் திறனை வளர்க்கும் விதத்தில் உள்ளது. ஒரு பிரச்னைக்குத் தீர்வு கண்டுபிடிக்கும் போதே அது மேலும் சில பிரச்னைகளை உருவாகுவதை நாம் அறிவோம். பணி புரியும் இடத்தில் பல்வேறு வயதுடைய மனிதர்களுடன் பணியாற்றுவது, அன்றாடம் பல்வேறு சூழல்களைச் சந்திப்பது போன்ற தேவைகள் இருப்பதால் தர்க்கரீதியான சிந்தனை உடையவர்களை நிறுவனங்கள் நாடுகின்றன.
4. சக மனிதர்களிடம் பழகும் தன்மை : ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்தத் திறன் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ் எனப்படும் திறன் உள்ளவர்கள் தான் இலக்குகளை எளிதில் அடைவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக சேல்ஸ், மார்க்கெட்டிங், கன்சல்டிங், மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் இந்தத் திறன் படைத்தவர்களே பெரும் வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். ஆனால் ஐ.டி., தொடர்புடைய துறைகளில் பணியாற்றும் பலருக்கும் இந்தத் திறனின் குறைபாடு காரணமாக எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடிவதில்லை. எனவே இந்தத் திறனையும் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
5. புதியதைக் கற்கும் திறன் : பட்டப் படிப்பைப் படிக்கும் காலத்திலேயே இந்தத் திறனை வளர்த்துக் கொள்வதே அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் இந்தத் திறமையை குறுகிய காலத்தில் பழக்கத்திற்குக் கொண்டு வருவது சிரமமான காரியமாகும். படிப்பை முடித்துவிட்டுப் புதிய நிறுவனமொன்றில் இணையும் இளைஞர்கள் இந்தத் திறனுடையவர்களாயிருந்தால் மட்டுமே நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்பதால் இதுவும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.
Sunday, 18 July 2010
Wonderfull
I received a Wonderful e-mail from my friend…... I would like to share this to you all....
1. If you see children Begging anywhere in TAMIL NADU please contact "RED SOCIETY" 9940217816. They will help those children for their studies.
2. There is a Website: www.friendstosupport.org where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address.
3. Engineering Students can register in www.campuscouncil.com to attend Off Campus for 40 Companies.
4. Free Education and Free hostel for Handicapped children..! Contact:- 9842062501 & 9894067506
5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM Hospital . From 23rd March to 4th April by German Doctors. Everything is free. Contact: 045420-40668, 245732 "Helping Hands are better than Praying Lips"
6. If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., Missed by someone, simply put them into nearby any Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.
7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So all of you lend your hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastics
8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"
9. Special phone number for Eye bank and Eye donation 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank) For More information about how to donate eyes plz visit these sites. . .
http://www.kannoli.com/eyebank.html
http://ruraleye.org
10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore. Contact : 9916737471
11. Please CHECK WASTAGE OF food if you have a function/party at your home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only in India ) - It’s not a Joke - Child helpline. They will come and collect the food. Please circulate this message which can help feed many children.
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN.
Sunday, 11 July 2010
புறம் பேசுதல்
முஸ்லிம்கள் ஒன்றுகூடும் சபையில் புறம் பேசுவது, பிறரை இழிந்துரைப்பது போன்ற செயல்கள் பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் உள்ளங்கள் வெறுக்கும் அறுவருப்பான உவமையைக் கூறி இதனை விட்டும் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் ஒருவர் தன்னுடைய சகோரசரின் மாமிசத்தை அவர் இறந்து பிணமாக இருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது அதனை நீங்கள் வெறுத்து விடுவீர்கள். (அல்குர்ஆன் 49:12)
புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்:
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி(ஸல்)அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி(ஸல்)அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் -புறம்- என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்)அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்)
நம்முடைய முஸ்லிம் சகோதரர் வெறுப்பதை நாம் கூறுவதே புறம் ஆகும். அது அவருடைய உடல், மார்க்கம் மற்றும் உலக விஷயம், மனோநிலை, நடைமுறை, குணம். ஆகிய எதனோடு தொடர்புடையதாக இருந்தாலும் சரியே! புறம் பேசுவதில் பல வகைகள் உள்ளன. ஒரு முஸ்லிமின் குறையைக் கூறுவதும் பிறரை இழிந்துரைப்பதும் புறம் பேசுவதில் ஒருவகையே!
அல்லாஹ்விடத்தில் மிகக்கேவலமான, இழிவாகக் கருத்தப்படும் புறம் பேசுதல் விஷயத்தில் மக்கள் மிகப் பொழுதுபோக்காக உள்ளனர்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி ஒருவன் தனது சகோதரனின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதாகும். (அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜைத்(ரலி) நூல்: அபூதாவூத்)
சபையில் இருப்பவர் இத்தீமையிலிருந்து பிறரைத் தடுப்பது கடமையாகும். மேலும் புறம் பேசப்படும் சகோதரருக்கு சார்பாக நாம் பேசவேண்டும். இவ்வாறு பேசுவதை நபி(ஸல்)அவர்கள் வரவேற்றுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்துவிடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி) நூல்: அஹமத்)
யா அல்லாஹ்! எங்களுடைய பாவங்களையும் எங்களுடைய செயல்களில் நாங்கள் வரம்புமீறியதையும் மன்னித்தருள்வாயாக! எங்களுடைய தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக!
நபி(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தோழர்களின் மீதும் அருள்புரிவாயாக!
ஆமின்.
Sunday, 4 July 2010
தமிழக இலஞ்ச ஒழிப்புதுரை தொலைபேசி எண்கள்
சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் ஹோட்டல் நடத்தி வரும் இந்திரா, சில சமயங்களில் இரவு 10 மணிக்கு மேலும் அதை திறந்து வைத்திருப்பது வழக்கம்.
இதையடுத்து எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, இந்திராவிடம் மாதந்தோறும் தனக்கு ரூ.5,000 மாமூல் தர வேண்டும், இல்லாவிட்டால் கடையை மூடுவேன் என்று மிரட்டினார்.
ஒரே தவணையாக கொடுக்க கஷ்டமாக இருந்தால் வாரத்திற்கு ரூ.1,250 லஞ்சமாக தர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இது குறித்து இந்திரா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து இந்திராவிடம் பணத்தைத் தந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதை கருணாநிதியிடம் கொடுக்குமாறு கூறவே, எம்.கே.பி. நகர் காவல் நிலையம் சென்றார் இந்திரா.
இன்ஸ்பெக்டரை அவரது அறையில் சந்தித்து பணத்தைத் தந்தார். அதை கருணாநிதி வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கீழ்ப்பாக்கம் லோட்டஸ் கார்டனில் உள்ள கருணாநிதியின் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
போலீஸ் நிலையத்திற்குள்ளேயே இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டது காவலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸே போலீஸை கைது செய்யும் அளவிற்கு நம் இந்தியாவில் இலஞ்சம் தலைவிறித்தாடுகின்றது.
இலஞ்சம் என்பது இந்த ஒரு காவல் நிலையத்தில் தான் நடைபெறுகின்றதா? எல்லர் காவல் நிலையத்திற்கும் சென்று இது போன்று இலஞ்ச ஒழிப்பு துறை பரிசோதனை செய்யுமா? அவ்வாறு செய்தால் எத்தனை காவல் நிலையங்கள் மிஞ்சும்?
பாதிக்கப்பட்ட மக்களை பாதுக்காக்க நியமிக்கப்பட்ட காவல்துறைனர் அவர்களிடமே இலஞ்சம் மாமுல் என்ற பெயரில் பணத்தை சூரண்டினால் பொதுமக்கள் எங்கே செல்வார்?
தமிழக இலஞ்ச ஒழிப்புதறை உயர் அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் இங்கே கொடுத்துள்ளோம் இலஞ்சம் தொடர்பான புகார்களுக்கு கீழ்கண்ட அதிகாரிகளை அனுகலாம்:
HEADQUARTERS
The Director,
NCB, 21-28, P S Kumarasamy Raja Salai, Raja Annamalai Puram, Chennai-600 028
Phone : (044) 24615929, 24615949 & 24615929
Fax : (044) 28293264
SPECIAL INVESTIGATION CELLS
Inspector General of Police,
Special Investigation Cell - I,
Vigilance and Anti-Corruption,
474, First Floor, E.V.R.Building,
Nandanam, Chennai – 600 035.
Phone : (044) 4320031.
Fax : (044) 4320032.
Inspector General of Police,
Special Investigation Cell – II,
Vigilance and Anti-Corruption,
474, First Floor, E.V.R.Building,
Nandanam, Chennai - 600 035.
Phone : (044) 4322277.
Fax : (044) 4320032.
Superintendent of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
474, First Floor, E.V.R.Building,
Nandanam, Chennai - 600 035.
Phone : (044) 4320032.
Fax : (044) 4320032.
Superintendent of Police,
Special Investigation Cell – II,
Vigilance and Anti-Corruption,
474, First Floor, E.V.R.Building,
Nandanam, Chennai - 600 035.
Phone : (044) 4323191.
Fax : (044) 4320032.
CENTRAL RANGE
The Superintendent of Police,
Central Range
Additional Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai Special Unit – I,
# 18, First Canal Cross Street,
Gandhi Nagar, Adyar,
Chennai - 600 020.
Phone : (044) 4455090
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City – I,
# 18, First Canal Cross Street,
Gandhi Nagar, Adyar,
Chennai - 600 020
Phone : (044) 4455091
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City – II,
# 18, First Canal Cross Street,
Gandhi Nagar, Adyar,
Chennai - 600 020
Phone : (044) 4455089
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai Special Unit – III,
# 18, First Canal Cross Street,
Gandhi Nagar, Adyar,
Chennai - 600 020
Phone : (044) 4455090
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 28, Bangaru Amman Colony, Ellappan Nagar,
Kancheepuram – 631 501.
Phone : (04112) 22139.
WESTERN RANGE
Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 168, Dr.Radhakrishnan Road,
Tatabad,
Coimbatore – 641 012.
Phone : (0422) 498501.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 168, Dr.Radhakrishnan Road,
Tatabad
Coimbatore - 641 012.
Phone : (0422) 498501.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 2, Ranganathan Street,
Karungalpalayam,
Erode – 638 003.
Phone : (0424) 210898.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Villa Dawn, Havelock Road,
The Nilgiris – 643 001.
Phone : (0423) 43962.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# B/3, Rajaji Road, Swarnapuri,
Salem - 636 004.
Phone : (0427) 448735.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Salem Special Unit,
# B/3, Rajaji Road, Swarnapuri,
Salem - 636 004.
Phone : (0427) 448735.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 30-A, Ramasamy Gounder Street,
Kamala Lakshmi Colony,
Dharmapuri - 636 701.
Phone : (04342) 60042.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 268-E, Periyar Nagar,
Krishnagiri - 635 001.
Phone : (04343) 31345.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 16, Neeli Godown Street,
Vellore – 632 001.
Phone : (0416) 220893.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 76, Logambal Koil Street,
Seetharam Nagar,
Cuddalore - 607 001.
Phone : (04142) 30216
SOUTHERN RANGE
Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 24, Kamala Second Street,
Chinna chokkikulam,
Madurai - 625 002.
Phone : (0452) 531395.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 24, Kamala Second Street,
Chinna chokkilulam,
Madurai - 625 002.
Phone : (0452) 531395.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 56, First Street,
Narayana Nagar,
East Govindapuram,
Dindugal – 624 007.
Phone : (0451) 431508.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 1/426-A, Om Sakthi Kovil,
Barathi Nagar,
Ramanathapuram - 623 503.
Phone : (04567) 20036.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 154, Kambar Street,
NGO Colony,
Virudhunagar - 626 001.
Phone : (04562) 45178.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 4, Muthusamy Nagar,
Sivagangai – 623 560.
Phone : (04575) 2222.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 74, Trivandram Road,
Palayamkottai, Tirunelveli – 627 002.
Phone : (0462) 580908.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 106J/24, First Street, Millerpuram,
Thoothukudi – 628 003.
Phone : (0461) 322243.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 23/4/12-A, Chirambaranathan Street,
Ramavarmapuram,
Nagarkovil - 629 001.
Phone : (04652) 27339.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
8/2, Quaid-E-Milleth Street,
Kaja Nagar,
Trichirapalli - 620 020.
Phone : (0431) 420166.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 12, Housing Unit, Rajagopalapuram,
Pudukottai – 622 003.
Phone : (04322) 22164.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# B-22, First Street,
Kannan Nagar,
Thanjavur – 613 007.
Phone : (04362) 37888.
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 4/67, Kumaran Koil Street,
Manjakollai,
Nagapattinam - 611 106.
Phone : (04365)
---------------------------------------------
அன்றியும்,உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்.மேலும்,நீங்கள் அறிந்துகொண்டே பிற மக்களின் பொருள்களில் இருந்து (எந்த)ஒரு பகுதியையும்,அநியாயமாக தின்பதற்காக அதிகாரிகளிடம் (லஞ்சம் கொடுக்க )நெருங்காதீர்கள். திருக்குரான் :2:188
ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும்
ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், இன்னும் ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த வெளியிட்டீன் மூலம் ஷஃபான் மாத சிறப்புகளையும், இன்னும் ஷஃபான் மாதத்தில் அரங்கேற்றப்படும் ஓர் சில வழிகேடான பித்அத்துகளையும் தெளிவுபடுத்துவது தான் நமது நோக்கம்.
ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்:
عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ (متفق عليه).
நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ (أبوداود, نسائي).
நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி).
ஷஃபானில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன:
قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ قَالَ حَدَّثَنِي أُسَامَةُ ابْنُ زَيْدٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ قَالَ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ (نسائي, أحمد).
உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்ளிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது, நபியவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, அஹ்மத்).
عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا حَدَّثَتْهُ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ وَكَانَ يَقُولُ خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّتْ وَكَانَ إِذَا صَلَّى صَلَاةً دَاوَمَ عَلَيْهَا * (متفق عليه).
நபியவர்கள் ஷஃபான் மாதத்தை போன்று வேறொரு மாதத்தில் அதிகம் நோன்பு நோற்கவில்லை. ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். இன்னும் நபியவர்கள்: உங்களுக்கு முடியுமான வணக்க வழிபாடுகளை செய்யுங்கள், நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். குறைவான வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து வருவதுதான் நபியவர்களுக்கு விருப்பமாக இருந்தது.
நபியவர்கள் தொழுவார்கள் என்றால், தொடர்ந்து அதை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். (முத்தபகுன் அலைஹி).
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஷஃபான் மாதத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும். எனவே நாமும் நபியவர்களின் இந்த நடைமுறையை செயல்படுத்துவோம். அதன் மூலம் ரமழான் மாத நோன்புக்கும் ஒரு பயிற்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நபியவர்கள் குறிப்பிட்டது போல் ஷஃபான் மாத விஷயத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் பாராமுகமாகத் தான் இருக்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் அமல்கள் உயர்த்தப்படுகின்ற இம்மாதத்தில் நாமும் அதிகம் நோன்பு வைப்பதற்கு முனைவோம்.
விடுபட்ட நோன்புகளை நோற்றல்:
عن أبي سلمة قال : سمعت عائشة – رضي الله عنها – تقول : (( كان يكون علي الصوم من رمضان ، فما استطيع أن أقضيه إلا في شعبان (متفق عليه).
‘எனக்கு ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை ஷஃபானில் தவிர நிறைவேற்ற முடிவதில்லை’ என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
விடுபட்ட ரமழான் மாத நோன்பை ஷஃபான் வரை பிற்படுத்துவதற்கு இந்த செய்தியிலிருந்து அனுமதி கிடைக்கிறது என்பதை அறியமுடிகிறது. மார்க்கம் கூறிய காரணங்களுக்காக ஒருவர் நோன்பை விடும் போது அல்லது குறிப்பாக பெண்கள் மாத விடாய், பிள்ளைப் பேறு ஆகியவைகளின் மூலம் நோன்பை விடும்போது, அதனை ஏனைய காலங்களில் நோற்க வேண்டும்.
ரமழானுக்கு ஒரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நோன்பு நோற்பது தடை:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ (البخاري, ومسلم).
‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).
உதாரணமாக: திங்கள், வியாழன் வழமையாக நோன்பு வைக்கும் ஒருவர், ரமழானுக்கு முந்தியுள்ள ஓரிரு நாட்கள் திங்கள் அல்லது வியாழனாக அமையுமானால் அவருக்கு நோன்பு நோற்பதற்கு அனுமதியுள்ளது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.
ஷஃபானின் 15 வது தினத்தை சிறப்பிப்பது வழிகேடான பித்அத்தாகும்:
‘நிச்சயமாக நாம் அதனை (அல்குர்ஆனை) பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம், நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக் கப்படுகிறது.’ (அத்துகான் 44: 3,4).
இவ்வசனத்தில் அல்லாஹ் ‘அருள் நிறைந்த இரவில்’ அல்குர்ஆனை இறக்கியதாகவும், அந்த இரவில் மனிதனின் வாழ்வாதரங்களுடன் தொடர்புபட்ட விஷயங்களை தீர்மானிப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் அருள் நிறைந்த இரவு என்பது ஷஃபானின் 15 வது இரவாகும் என்று சிலர் வாதிக்கின்றனர். இது நேரடியாகவே குர்ஆனுடன் மோதக்கூடிய ஒரு வாதம் என்பதை ஏனோ அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.
அல்லாஹ் புனிதமிக்க அல்குர்ஆனில் மற்றுமோர் இடத்தில்: ‘ரமழான் மாதம் எத்தகையது எனில் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய அல்குர்ஆனை நாம் அருளினோம்’. (2: 185).
மற்றுமோர் இடத்தில்: ‘லைலதுல் கத்ர் இரவில் நாம் இதை (அல்குர்ஆனை) அருளினோம்’ என குறிப்பிடுகிறான். எனவே அத்துகான் அத்தியாயத்தில் இடம் பெற்ற ‘அருள் நிறைந்த இரவு’ என்பது ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் இரவு தான் என்பதை அல்குர்ஆனின் ஏனைய வசனங்களையும் பார்க்கும் போது தெளிவாக விளங்க முடிகிறது. எனவே இவர்களில் கூறுவது போன்று ஷஃபானின் 15 வது இரவுக்கும் இதற்கும் மத்தியல் எந்த தொடர்பும் இல்லை.
ஷஃபானின் 15 வது இரவை ‘பராஅத்’ என்று கூறி அந்த இரவை புனிதப்படுத்துவதும், அதன் பகல் காலத்தில் நோன்பு நோற்பதும், மூன்று யாசீன்கள் ஓதி ரொட்டி போன்ற உணவு வகைகளை தயாரித்து பகிர்ந்தளிப்பதும் இந்த நாளில் செய்யப்படும் தெளிவான பித்அத்துகளாகும். மார்க்கத்தில் இவைகளுக்கு எந்த அடிப்படையுமில்லை.
பித்அத்துகள் அனைத்தும் தெளிவான வழீகேடு என்பது நபியவர்களின் கூற்று என்பதை உணர்ந்து இவ்வாறான பித்அத்துகளை விட்டு விழகி இருப்பதுடன், ஏனையவர்களையும் தடுப்போமாக.
ஷஃபானின் 15 வது இரவுடன் தொடர்பு படுத்தி சில புணைந்துரைக்கப்பட்ட செய்திகளும் இருக்கின்றன அவைகளையும் இங்கு குறிப்பிடுவது பொறுத்தமென நினைக்கிறேன்.
قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي…….)).
‘ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
قوله صلى الله عليه وسلم:((من صلى ليلة النصف من شعبان ثنتي عشرة ركعة، يقرأ في كل ركعة((قل هو الله أحد)) ثلاثين مرة ، لم يخرج حتى يرى مقعده من الجنة..
‘ஷஃபானின் 15 வது இரவில் எவர் 12 ரக்அத்துகளை தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் இஹ்லாஸ் அத்தியாயத்தை 30 தடவை ஓதவாரோ, சுவர்க்கத்தில் அவர் தங்கும் இடத்தை பார்க்காமல் அங்கிருந்து வெளியேற மாட்டார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இச்செய்திகள் அனைத்தும் நபியின் பெயரால் புணைந்துரைக்கப்பட்ட வைகளாகும். இவைகளை இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் தனது ‘மவ்லூஆத்’ என்ற கிரந்தத்தில் குறிப்பிடுகிறார். இவைகளை விட்டு நாம் எச்சரிக்கையாக இருப்பது கட்டாயமாகும்.
Correct timing to take water....very important
Saturday, 3 July 2010

செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி) சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.
இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.
அந்த லிஸ்ட்:
மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg
ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg
எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg
பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg
சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg
மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg
மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg
பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg
எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)
அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg
சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)
அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg
காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg
உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg
ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.
மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே செல்போன் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன் இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்!
Urgent Requirements for Saudi Arabia
Job No # 01
We have openings for below mentioned position for A leading Contracting Company located in Riyadh, Saudi Arabia
Position : Quantity Surveyor
Experience: 10 years of Relevant Experience in Quantity Survey
Visa Status : Visa Avaialble in India
Job No # 02
Position : Computer Programmer
Experience: Strong experience in Unix/C with at least 2 years experience.
Visa Status : Visa Avaialble in India
Good growth opportunities with very good salary packages please Send your updated CV to : darulmarva@yahoo.com
Note : Please ignore this message, if the profile does not match your experience.
முஸ்லீம்களுக்கு அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்!
KULLU NAFSIN THAIQATU AL MAWT
(sura-al-imran-185)
Subject:முஸ்லீம்களுக்கு அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்!
Asalamu alaikum,
முஸ்லீம்களுக்கு அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்!
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது. இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது
1 - 10 வகுப்பு வரை
தகுதிகள்:
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
* ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது
பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல் நகல் (xerox)
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26
கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
புதுப்பிக்கும் மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்
11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)
தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26
கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
ஏற்கனவே பயணித்த மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்
தொழிற்படிப்புகள் ( Engineering )
தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது)
* IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்)
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26
கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
ஏற்கனவே பயணித்த மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்
மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் : http://www.tn. gov.in/bcmbcmw/welfschemes_ minorities. htm
Thursday, 1 July 2010
குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
நம் குழந்தைகளைத் தொழ ஆர்வமூட்ட வேண்டியது நமது கடமை என்பதிலும் , அதைச் செய்யாத பட்சத்தில் அல்லாஹ்விடம் அதற்காக பதில் கூற வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. குழந்தைகளிடம் தொழுகையை ஆர்வமூட்டும் போது அவர்களுக்கு பிடித்த மாதிரி அவர்களுடைய மனநிலைக்கு ஏற்றவாறு செய்ய வேண்டும். இவற்றை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே “ MY PRAYER TREE”
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
1) 1) இதனுடன் இணைக்கப்பட்டுள்ள “MY PRAYER TREE” ஐ பிரதி எடுத்து குழந்தையிடம் கொடுத்து வீட்டின் முக்கிய பகுதியில் ஒட்டச் சொல்லவும். ( மாதம் ஒரு பிரதி)
2) 2) பச்சை , மஞ்சள் , சிகப்பு நிற கலர் பென்சில்களை வாங்கிக் கொடுக்கவும்.
3) 3)அதில் குறிப்பிட்டுள்ள 1,2,3,.....31 மாதத்தின் நாட்களைக் குறிக்கும். ஒவ்வொரு நாளிளும் 5 நேரத் தொழுகையைக் குறிக்க 5 இலைகள் உள்ளன.
4) 4)குறிப்பிட்டுள்ளபடி, ஜமாத்துடன் தொழும் தொழுகையை பச்சை நிறத்திலும், ஜமாத்தில்லாமல் ஆனால் குறித்த நேரத்தில் தொழும் தொழுகையை மஞ்சள் நிறத்திலும், நேரம் தவறிய தொழுகையை சிகப்பு நிறத்திலும் ( அதற்கான இலையை) வண்ணமிட வேண்டும்.
5) 5) மாதத்தின் இறுதியில் வண்ண இலைகளுக்கு மதிப்பெண் வழங்கி , மதிப்பெண்ணிற்கு ஏற்ப பரிசு வழங்கவும்.
6) 6)இன்ஷா அல்லாஹ் சில மாதங்களில் உங்கள் குழந்தை நியமமாக தொழக் கூடியவர்களாக ஆகி விடுவர். நீங்களும் உங்கள் பொறுப்பை நிறைவேற்றிய நிம்மதியை அடைவீர்கள்.
குறிப்பு – பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிவோர் தங்கள் வகுப்பின் மொத்த முஸ்லிம் குழந்தைகளையும் தங்கள் பொறுப்பில் எடுத்து தொழ ஆர்வமூட்டலாம்.
அல்லாஹ்வின் நன்மையை நாடி தெரிந்தவர்களுக்கு பரப்பவும்......
பெண்களே!!! துணிக்கடைகளில் உடை சரிபார்க்கும் அறைக்கு செல்லும்போது

வீண் விரயம் செய்யாதீர்கள்
ஏகஇறைவனின் திருப்பெயரால்....
வீண் விரயம் செய்யாதீர்கள்.
படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒரிலவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 6:141.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம் ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளை தாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக் கொடுத்தான்.
அனைத்து வகை உயிரினங்களும் தன்னுடையத் தேவைக்குப் போதுமான அளவு உண்டுப் புசித்து தன்னைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துகின்றன.
மனிதர்களாகிய நாமும் இறைவன் நமக்கு அளித்த பொருள் வளத்திலிருந்து போதுமான அளவு உண்டுப் புசித்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் ஸகாத் எனும் ஏழை நிதியை பொருளீட்ட முடியாத வறிய நிலையிலுள்ளோருக்கு மனமுவந்து வழங்குவதுடன் எஞ்சி இருக்கும் பொருளாதாராத்தை வீண் விரயம் செய்யக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 6:141.
தேவைக்கு மீறி சமைப்பதும், மிஞ்சுவதைக் கொட்டுவதும்.
மனிதனுடைய உள்ளத்தில் இதுப் போதாது, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று சொத்து சேர்ப்பதிலிருந்து நாவுக்கு சுவையானத் தீணிப் போடுவது வரை எல்லா நிலைகளிலும் எல்லை இல்லாத ஆசையை விதைத்து பொருளாதாரத்தை விரயமாக்கச் செய்வது ஷைத்தானின் வேலையாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். திருக்குர்ஆன் 4:36
உள்ளத்திற்கு கடிவாளமிட்டு எந்த தேவைக்கும் குறிப்பிட்ட அளவை நிர்ணயித்தக் கொண்டு போதுமென்ற சிந்தனையை யார் உருவாக்கிக் கொள்வாரோ அவரே இறைவனின் திருப்பொருத்தத்திற்கு உகந்த அடியாராவார் இறைவனின் அடியானின் பக்கம் ஷைத்தான் நெருங்க மாட்டான். ...உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்'' என்று கூறினான். திருக்குர்ஆன் 15:40
இன்றுப் பார்க்கின்றோம்.
எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல வகை உணவுகளை பணக்கார வீடுகளில் தயார் செய்து அளவுக்கு மீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல் மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது.
யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வெறு
வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் கொட்டுவது என்பது வேறு.
இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது. சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் ( முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீமல்லாதோராக இருந்தாலும் ) சிறிதை சேர்த்து சமைக்கச் சொல்கிறது ஈகை குணத்தை வலியுருத்தும் இஸ்லாம். அபூதர்ரே ! நீர் குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக ! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக ! என்று கருணை நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்.
அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது இதிலிருநது பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா ? என்று கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார் என்று நபி (ஸல்)அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள் ஆதார நூல்: திர்மிதீ
உணவு வகைகளும், அளவும் கூடுதலாக இருக்கிறதென்றுக் கருதி சமையலறையிலேயே சிறிதை பக்கத்து வீட்டாருக்காக ஒதுக்குவதில்லை சமைப்பது அனைத்தும் டைனிங் ஹாலுக்குப் போய் கைகளால் புறட்டப்பட்டு மிஞ்சுவது குப்பைக்குப் போய் விடுகிறது.
விருந்துகளிலும் இதே நிலை.
ஒரு காலத்தில் விருந்துகளில் தயார் செய்யப்படும் பிரியானி உணவில் இறைச்சி இட்டு சமைப்பார்கள். அதனுடன் வெங்காயம் தயிர் கலந்த ஊறுகாய் ஒன்று மட்டும் அதிகமாக சேர்த்து கொள்வார்கள்.
அது சிறிது காலத்தில் வசதி படைத்தவர்களின் விருந்தில் முன்னேற்றம் அடைந்து முட்டை சேர்க்கப்பட்டது,
இன்று அதுவும் முன்னேற்றம் அடைந்து அவைகளுடன் சிக்கன் ஃப்ரை,அல்லது சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் சேர்க்கப்படுகிறது.
இனிவரும் காலங்களில் அதனுடன் காடை, கொக்கு ஃப்ரை ஐட்டங்களும் சேர்க்கப்படலாம்.
பெரும்பாலும் விருந்துகளுக்கு பிரபலங்கள் அழைக்கப்படுவதால் வெரைட்டிகளை அதிகப்படுத்துகின்றனர் விருந்தினர் அதிலொன்றும்,இதிலொன்றுமாக கை வைத்து விட்டு அப்படியே விட்டு விடுகின்றனர் அவைகளும் பெருமளவில் குப்பைகளுக்கே செல்கின்றன.
இஸ்லாம் தடை செய்கிறது.
இவ்வாறு செய்வதை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது எந்தளவுக்கென்றால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறுத் துண்டு உணவைக் கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச் சொல்கிறது இஸ்லாம் ...உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம் என்று அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)அவர்கள் அறிவுருத்தினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி.
ஒரு சிறுத் துண்டைக் கூட ஷைத்தானுக்கு விட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகையில் தட்டை, தட்டையாக கொண்டுப் போய் குப்பையில் தட்டலாமா ? சிந்தித்தால் சீர் பெறலாம்
விருந்துகளுக்கு அழைக்கப்படுபவர்களில் ஏழைகளும் இருக்க வேண்டும் என்று ஏற்றத் தாழ்வுகளைக் கலைந்து சமநிலைப படுத்திய இஸ்லாம் வலியுருத்துவதுடன் ஏழைகள் அழைக்கப்படாத விருந்தே விருந்துகளில் வெறுக்கத்தக்கது என்றும் கண்டிக்கிறது இஸ்லாம். வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைi(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி-முஸ்லீம்
ஏழைகள் என்பவர்கள் எங்கிருந்தோ தேடிக் கண்டுப் பிடித்து அழைத்து வரப்படுபவர்கள் அல்ல மாறாக ஒவ்வொரு பணக்காரர்களின் குடும்பத்திலும் ஏழைகள் இருக்கின்றனர் அவர்களும் விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதிகபட்சம் உணவுகள் குப்பைக்குப் போகாது.
ஆனால் விருந்துகளில் கலந்து கொள்ள வரும் பிரபலங்கள் இந்த ஏழைகளைக் கண்டால் முகம் சுளிக்கலாம் என்றுக் கருதியேப் பெரும்பாலும் இரத்த உறவுகளாகிய ஏழைகள் அழைப்பதில்ல. அழைத்தாலும் இவர்களுடன் அல்லாமல் வேரொறு ஹாலுக்கு அனுப்பப்படுவார்கள் அதனால் அவர்களது உணவுகளை குப்பையில் கொட்ட வைத்து அல்லாஹ் அவர்களை ஷைத்தானின் தோழர்களாக்கி விடுகின்றான்.
அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த மனிதன் தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள் வளத்தை வழங்கிய அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றான்.
இது இந்தியாவின் நிலை என்றால் ? அரபு நாடுகளின் நிலையோ இதை விட மோசம் எனலாம்.
விருந்து நடந்து முடிந்தப் பகுதியின் குப்பைத் தொட்டிகள் அனைத்தும் உயர் தர உணவுகளால் நிரம்பி வழிந்து ரோடுகளிலும் சிதறிக் கிடப்பதைக் காணலாம்.
ஒரு காலத்தில் இஸ்லாமிய நாடுகளை ஆளும் ஆட்சியாளர்கள் இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தார்கள், தங்களின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட மக்களையும் இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்றி வாழும்படி ஏவினார்கள்.
இன்றைய ஆட்சியாளர்கள் அவற்றிற்கு நேர்மாறான வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
Ø ஒரு மன்னர் குடும்பத்தில் பிறந்திருக்கா விட்டாலும் பரவாஇல்லை,
Ø ஒரு அமீர் குடும்பத்திலாவது பிறந்திருக்கக் கூடாதா ?
என்று அவர்களின் ஆடம்பர வாழ்க்கையைக் கண்டு ஏழைக் குடிமக்கள் ஏங்கித் தவிக்கும் மோசமான முன்மாதிரிகளாக ஆகிக் கொண்டார்கள்.
இவர்களின் வீடுகளில் தயார் செய்யப்படும் உணவு வகைகளை சொல்லவே வேண்டியதில்லை எனும் அளவுக்கு மிதமிஞ்சி குப்பைத் தொட்டிகளை நிறைத்து வருகின்றனர்.
நல்ல முன் மாதிரி
சமீபத்தில் ஆஸ்திரேலிய ஸிட்னி நகரில் சர்ரி ஹில்ஸ் என்ற ஊரில் இயங்கும் ஓட்டல் ஒன்றில்
Ø சாப்பாட்டை மீதம் வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும்,
Ø முழுமையாக சாப்பிட்டால் 30 சதவிகிதம் விலையில் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவித்து போர்டு வைத்துள்ளனர். http://www.dailythanthi.com/
இந்த முன் மாதிரியை அனைத்து ஹோட்டல்களிலும் பின்பற்றினால்,
மீதம் வைக்காத அளவுக்கு போதுமான சாப்பாட்டை வீடுகளில் சமைத்தால்,
விருந்துகளில் ஏழைகளும் அழைக்கப்பட்டு சமமாக நடத்தப்பட்டால்,
அல்லாஹ்வின் அருட்கொடையாகிய உணவு குப்பைக்கு செல்வதை ஓரளவாவது தடுத்து நிருத்த முடியும்.
அவ்வாறு தடுத்தால் ஷைத்தான் நுழையும் வழிகளில் ஒன்றை அடைத்துஷைத்தானின் சூழ்ச்சி முறியடிக்கப்படும்.
இறைவனின் அடியார்களை அவனின் நிணைவிலிருந்து திசை திருப்புவதற்காக ஷைத்தான் வகுத்தப் பலவழிகளில் பொருளாதாரத்தை வீண் விரயம் செய்வதற்காக தூண்டும் வழி முக்கியமான வழியாகும்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். த்ல்மச்;என்;ஙக்; 4:36
Ø உணவு இறைவனின் அருட் கொடை இந்த அருட் கொடையை வீதியில் வீசி எறியலாமா ?
Ø வீதியில் வீசி எறியும் அளவுக்கு மிதமிஞ்சி விருந்து செய்யலாமா ?
Ø இன்று உலகில் எத்தனையோ மக்கள் உணவு கிடைக்காமல் செத்து மடிவதற்கான காரணங்களில் குறிப்பிட்ட ஓரிடத்தில் உணவுகள் சீரழிக்கப்படுவதும் முக்கியக் காரணம் என்பதை பலருடைய மனம் ஏற்க மறுக்கின்றது ஏனோ ???
சிந்தியுங்கள் சீர் பெறுவீர்கள்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அளவுக்கு மீறிப் பறிமாறுவது


























