புதுடெல்லி: அதிகமான அளவில் செல்போன் உபயோகித்தாலோ அல்லது செல்போன் டவர் இருக்கும் இடத்தில் வசித்தாலோ உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் என இந்தியன் கவுன்சில் ஆப் ரிசர்ச் மையம் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அளவுக்கு அதிகமான செல்போன் பயன்பாட்டினால் கழலை நோய், குழந்தையின்மை மற்றும் நரம்பியல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த அதிக அளவிலான செல்போன் பயன்பாட்டினால் பெண்கள் அதிகளவில் பாதிப்படைவர் எனவும் தெரியவந்துள்ளது. செல்போனில் இருக்கும் கதிரியக்கமே பெருமளவில் இந்த பாதிப்பை உண்டாக்குகிறது.
No comments:
Post a Comment