Search

Tuesday, 8 June 2010

மக்கள்தொகை கணக்கெடுப்பு: விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டுகோள்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

செய்தி வெளியிடப்பட்டது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு என்றாலும், இச்செய்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திற்கும் பொருந்தும் என்பதால், சகோதரர்கள் தங்கள் வீடுகளுக்கு இது பற்றிய தகவலை தெரிவித்து, குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை எழுத்துப் பிழை இல்லாமல் எழுதி வைத்திருக்கச் சொல்லுங்கள்.

http://kanyakumari.com/news/?p=938

மக்கள்தொகை கணக்கெடுப்பு: விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டுகோள்

நாகர்கோவில், மே 21: கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் கு. கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:



தமிழகத்தில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பும், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பும் இவ்வாண்டு ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும்.

இதற்காக கணக்கெடுப்பாளர்கள் உங்கள் வீடு தேடி வந்து உங்களிடமிருந்து விவரங்களை சேகரிப்பார்கள்.



வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் முக்கிய விவரங்கள்:



குடும்பத் தலைவர் பெயர், குடும்பத்திலுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மொத்த நபர்களின் எண்ணிக்கை, வீட்டின் கட்டுமானப்பொருள், குடிநீர் வசதி, சமையல் வசதி, கழிப்பிட வசதி, குடும்பத்தின் வசமுள்ள பொருள்கள் (சைக்கிள், மோட்டார் சைக்கிள், மொபெட், கார், ஜீப், வேன், டிரான்சிஸ்டர், ரேடியோ, தொலைபேசி, கைபேசி, கணினி போன்றவை)



தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு சேகரிக்கப்படும் விவரங்கள்:



குடும்பத் தலைவரின் பெயர், குடும்ப அங்கத்தினர்களின் பெயர், ஒவ்வொரு நபரின் பிறந்த தேதி, திருமண நிலை, தொழில், நடவடிக்கை, தந்தை, தாயார், துணைவர் பெயர், பிறந்த ஊர், தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி.



குடும்ப அங்கத்தினர்கள் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருக்கவும்.



கணக்கெடுப்பாளர்கள் வரும்போது தேடாமல் இந்த விவரத்தை உடனே கொடுக்க வசதியாக இருக்கும்.



இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இலவச தொலைபேசி எண்- 1800-110111.

No comments:

Post a Comment