Search

Monday, 7 June 2010

விடுதியில் இலவசமாக தங்கிப் படிக்க இஸ்லாமிய மாணவிக‌ள் விண்ணப்பிக்கலாம் .

இஸ்லாமிய மாணவியர், 4 முதல் 10ஆம் வகுப்பு வரை அரசு விடுதியில் தங்கிப் படிக்க விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக த‌மிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொட‌ர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல், இஸ்லாமிய மாணவியர்கள் இடைவிடாது கல்வியினை பயிலும் நோக்கில் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ சுந்தரபுரம் மற்றும் பாளையங்கோட்டையில் அரசினர் இஸ்லாமிய பள்ளி-கல்லூரி மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கு இவ்விடுதிகளில் மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்விடுதிகளில் 4ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை பயிலும் இஸ்லாமிய மாணவியர்கள் சேர்க்கப்படுகின்றனர். மாணவியரின் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இவ்விடுதிகளில் மாணவியர்களுக்கு இலவசமாக உணவு மற்றும் உறைவிடமும், அனைத்து தேவையான அடிப்படை வசதிகளும் அளிக்கப்படுகிறது. மேலும் 4ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு இலவசமாக 2 செட் சீருடைகள் தைத்து வழங்கப்படுகிறது.

10, 12ஆம் வகுப்பு பயில்பவர்களுக்கு இலவசமாக சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படுகிறது. தொலைதூரத்தில் இருந்து கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவியர்களுக்கு மேற்படி விடுதி சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

சிறுபான்மை இனத்தைச் சார்ந்த மாணவ-மாணவியர்கள், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இயங்கிவரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளிலும் சேர்ந்து பயனடையலாம்.

2010-11ஆம் ஆண்டில் விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளின் காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தும் விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் சமர்ப்பிக்க வேண்டிய நாள் பள்ளி விடுதிகளு‌‌க்கு ஜூ‌ன் 10ஆ‌ம் தே‌தி மாலை 5.45 மணிக்குள்ளு‌ம், கல்லூரி விடுதிகளு‌க்கு ஜூ‌ன் 24ஆ‌ம் மாலை 5.45 மணிக்குள். சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் மேற்படி விடுதிகளில் சேர்ந்து பயனடையுமாறு சிறுபான்மையின நல ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
Web Links :

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1005/27/1100527030_1.htm

No comments:

Post a Comment